மாடு தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
Monday, August 21st, 2017
வேலணை மேற்கு 5ஆம் வட்டாரப் பகுதியில், வளர்ப்பு மாடு தாக்கியதில், குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முனியாண்டி பொன்னையா (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர், நாம்பன் மாடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். வழமைபோன்று, மாட்டுக்குத் தண்ணீர் வைக்கச் சென்ற வேளை, மாட்டைப் பிடித்துக் கட்டுவதற்கு முயன்றபோது, மாடு அவரைத் தாக்கியுள்ளது. இதில் படுகாயங்களுக்கு உள்ளான நபர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி நேற்று (19) இரவு உயிரிழந்துள்ளார்.
Related posts:
அதிவேக பாதையை பயன்படுத்துவோர் தொகை அதிகரிப்பு
வர்த்தக ஒருங்கிணைப்பே அண்டை நாடான இந்தியாவுடனான நமது உறவை தீர்மானிக்கிறது - சர்வதேச வர்த்தகத்தை கையா...
யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் “காடையர்” என கடற்றொழிலாளர் பிரதிநிதியை கொச்சைப்படுத்திய கஜேந்திர...
|
|
|


