யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் “காடையர்” என கடற்றொழிலாளர் பிரதிநிதியை கொச்சைப்படுத்திய கஜேந்திரன் எம்.பி – பொங்கி எழுந்த கடற்றொழிலாரள்கள்!

Thursday, December 28th, 2023

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பொது அமைப்புகளுக்கு பேசுவதற்கான உரிமையை கொடுக்கக்கூடாது என தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கூறியதை அடுத்து சிறுநேரம் அமைதி இன்மை ஏற்பட்டது.

இன்றையதினம் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவரும் வடமாகாண ஆளுநருமான திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பு குழுகூட்டமானது தமிழ் எம்.பிகள் , பாதுகாப்பு தரப்பினர் மற்றும் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலரது பங்கேற்புடன் நடைபெற்றது.

பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்ட நிலையில் குறித்த கூட்டத்தில் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழகத்திற்கு வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சென்று தமிழக அரசுடன் பேசி தீரா பிரச்சினையாக தொடரும் மீனவர்களின் பிரச்சனைக்கு கூடியளவான தீர்வைக் காணலாம் என தெரிவித்திருந்தார்.

இதன்போது குறுக்கிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் நீங்கள் கடற்தொழில் அமைச்சராக இருந்து கொண்டு இந்திய இழுவை மடி பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை என்றால் அமைச்சிலிருந்து வெளியேறுங்கள் நாங்கள் அதன் பின்னர் பார்த்தக்கொள்கின்றோம் என கடுந்தொழியில் தெரிவித்திருந்தார

இதன்போது மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் கஜேந்திரன் எம்பியின் கருத்தை மறுதலித்ததுடன் நாடாளுமன்றில் வாய் நிறைய கத்தும் நீங்கள் ஏன் கடற்றொழிலாளர்களது கள நிலைமையை எடுத்துச் சொல்ல தமிழகம் செல்ல தயங்ககின்றீர்கள். உங்களது போலி நாடகத்தை இனியும் எங்களிடம் கட்டாதீர்கள். நாடாளுமன்றில் தொப்பூழ் கொடி உறவு என வீர வசனம் பேசிவிட்டு வெளியே வந்து அரசாங்கத்தையும் கடற்படையினரையும் குறைகூறிவருவது வெக்கமில்லையா. உங்களால் தான் எமது கடல் வழங்கள் இந்திய தரப்பினரால் சுரண்டப்படுகின்றது என சுட்டிக்காட்டியிருந்தார்.

இதன்போது கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய கஜேந்திரன் எம்பி கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதியாக கருத்துரைத்தவரை நோக்கி “காடையருக்கு” கூட்டத்தில் கருத்துரைக்க அனுமதி கொடுக்க கூடாது என தகாத வார்த்தை பிரயோகத்தை மேற்கொண்டார் இதனால் கோபமடைந்த குறித்த கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து கஜேந்திரன் எம்பிக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: