மலையக தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை!
Sunday, October 2nd, 2016
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி மஸ்கெலியா நகரில் இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் நீதிமன்ற உத்தரவு காரணமாக தடைப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக இன்று (02) காலை கூடியிருந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் நீதிமன்ற உத்தரவு தொடர்பில் பொலிஸார் அறிவித்ததாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.
மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த சில முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸாரினால் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா நகரில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டால் நகரின் அமைதிக்கு குந்தகம் ஏற்படலாம் என தெரிவித்து சிலர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

Related posts:
நஷ்டத்தில் பொறுப்பேற்ற சதொச இலாபத்தில் !
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிப்பு!
விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் சிறப்புக் கண்காட்சி - எயர் வைஸ் மார...
|
|
|


