யாழ்ப்பாண கலாசார நிலையம் தொடர்பில் பாரதப் பிரதமர் மோடி பெருமிதம் – டுவிட்டரில் தமிழ், சிங்கள மொழிகளில் பதிவு!

Tuesday, February 14th, 2023

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான நெருக்கமான கலாசார ஒத்துழைப்பை அடையாளப்படுத்தும் ஒரு முக்கிய செயற்றிட்டமாக யாழ்ப்பாணம் கலாசார நிலையம் காணப்படுகிறது.

இத்திட்டத்தினூடாக பெருமளவான மக்கள் நன்மையடைவரென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தனது உத்தியோகபூர்வ  டுவிட்டர் தளத்தினூடாக வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அதியுயர் பிரசன்னம் யாழ்.கலாசார நிலையம் திறப்பு விழாவை மேலும் சிறப்பித்துள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கமான கலாசார ஒத்துழைப்புக்களை அடையாளப்படுத்தும் ஒரு முக்கிய செயற்திட்டமாக யாழ்ப்பாணம் கலாசார நிலையம் காணப்படுகிறதென்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார நிலையத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்தியா வழங்கும் ஒத்துழைப்பு அளப்பரியது. இலங்கையும் இந்தியாவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போல் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ். கலாசார நிலையம் திறப்பு விழாவின் போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: