மலையகத்தில் கடும் பனிமூட்டம் – அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு அறிவிப்பு!
Saturday, September 3rd, 2016
மலையகத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் – டயகம பிராதான வீதியின், போடைஸ், எல்பியன் பகுதிகளில் பனிமூட்டம் நிலவியுள்ளது.
பிரதேசத்தில் நேற்று மாலை முதல் பனிமூட்டம் நிலவியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இதன் காரணமாக ஹட்டன் – டயகம வீதீயூடாக பயணிக்கும் வாகன சாரதிகளை அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன் பிரதேசத்தில ஓரளவு மழை பெய்வதால் வீதியிலும் வழுக்கல் தன்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
மக்கள் மீது எரிபொருட்களுக்கான வரி திணிக்கப்படமாட்டாது!
நுண்கடன் பெற்றவர்களுக்கு சமுர்த்தியை நிறுத்தத் திட்டம் - துணுக்காய் பிரதேச செயலாளர் தெரிவிப்பு!
கடுமையான சுகாதார நடைமுறைகளுடன் வழமைக்கு திரும்பியது குடாநாட்டின் பொதுச் சந்தைகள்!
|
|
|


