நுண்கடன் பெற்றவர்களுக்கு சமுர்த்தியை நிறுத்தத் திட்டம் – துணுக்காய் பிரதேச செயலாளர் தெரிவிப்பு!

Wednesday, February 8th, 2017

நுண்டகடன் பெற்றுக்கொள்ளும் சமுர்த்திப் பயனாளிகளின் கொடுப்பனவுகளை எதிர்காலத்தில் நிறுத்துவது தொடர்பாக ஆராயப்படுகின்றது. என துணிக்காய் பிரதேச செயலாளர் பிரதாபன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலேயே இப்போது நுண்கடன் வழங்கல் இடம்பெறுகின்றன. நுண்கடனுக்காக பயனாளிகளிடம் இருந்து 24சதவீத வட்டி அறவிடப்படுகின்றது. இந்த சட்டத்தின் பிரகாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா என்பதும் ஆராயப்பட வேண்டும். சமுர்த்திக் கொடுப்பனவுகளைப் பெறுவோர் இவ்வாறு அதிக கடன்களை பெற முடியாது. அவர்கள் கடன் பெற்றமை நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எம்மிடம் இல்லை. அவர்களுக்கான சமுர்த்திக் கொடுப்பனவை நிறுத்தும் அதிகாரம் உண்டு. சமுர்த்திக் கொடுப்பனவு வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் என்று கணிக்கப்பட்டவர்களுக்கே வழங்கப்படுகின்றன.

அதிக கடன்களைப் பெறுவோர் வறுமைக்கோடு என்ற நிலையைத் தாண்டியவர்களாகவே கருதப்படுவார்கள். தணிக்காய் பிரததேச செயலாளர் பிரிவின் கீழ் நுண்கடன் பெற்றவர்களின் பட்டியலைத் திரட்டியுள்ளோம். இதுவரை 196பேர் நுண்கடன் பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் சமுர்த்திப் பயனாளிகள் உள்ளனரா என்பது ஆராயப்படுகின்றது. அதன் பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

samurthi

Related posts: