மலேசியாவில் உயிரிழந்த இளைஞரின் சடலம் கையளிப்பு!

மலேசியாவில் இறந்த இளைஞரின் சடலம் இன்று (16) வெள்ளிக்கிழமை இலங்கையில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை தேவபுரம் பாடசாலை வீதி எனும் முகவரியை சேர்ந்த சந்திரன் சிறிஸ்கந்தராஜா (வயது 23) என்பவரே இவ்வாறு மலேசியாவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி விலாசத்தில் உள்ள இறந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மலேசியாவில் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 10ம் திகதி இரவு தொலைபேசி அழைப்பு மூலம் இறந்த தகவல் கிடைத்ததாகவும், அதனை தொடர்ந்து சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்ததாகவும் இறந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
Related posts:
எழுதுமட்டுவாழில் வெடிபொருள் மீட்பு!
தேர்தல் சட்டங்களை மறுசீரமைப்பது தொடர்பான நாடாளுமன்ற விசேட குழு அடுத்த மாதம் நான்கு நாட்கள் கூடுகிறது...
எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தயார் - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|