மற்றுமொரு வாள்வெட்டுச் சம்பவம்!
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள மாதா கோயிலுக்கு அருகாமையில், புதன்கிழமை இரவு வாள்வெட்டுச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. மோட்டார் சைக்கிளில், குறித்த பகுதிக்கு வந்த மூவர், முகங்களை துணியால் மறைத்துக் கட்டியவாறு, அப்பகுதியில் நின்ற இளைஞர்களை வாளால் வெட்ட முயன்றுள்ளனர்.
எனினும் இளைஞர்கள் தப்பியோடியதால் அவர்களுடைய மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து, யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, அப்பகுதிக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
![]()
Related posts:
கோட்டாபய ராஜபக்ஷ வெளியேறியதில் இந்தியாவுக்கு எந்த பங்கும் கிடையாது - இந்திய வெளியுறவு பேச்சாளர் அரிந...
வடக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் பலமான மின்னல் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனிநபர்களுக்கான வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கப்படும் - நிதி இரா...
|
|
|


