செலவுக் குறைப்பிலிருந்து திறைச்சேரிக்கு 53 பில்லியன் ரூபா வருவாய் – அத்தியாவசிய உணவு – மருந்து பொருட்களிற்கான வரிகள் நீக்கம் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ!

Tuesday, January 4th, 2022

கடந்த 6 மாதங்களில் அரச நிறுவனங்கள் செலவினங்களை குறைத்து 53 பில்லியன் ரூபாவை திறைசேரிக்கு சேமித்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்..

இது தொடர்பில் மேலும் கருத்த தெரிவித்த நிதி அமைச்சர் கூறுகையில் –

“பலர் பல விதமான விடயங்களைச் சொன்னாலும், இந்த காலப்பகுதியில் பல சிரமங்களுக்கு மத்தியிலும் நாங்கள் எமது நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தியுள்ளோம்.

குறிப்பாக ஊழல், வீண், மோசடி போன்றவற்றையும் ஒழித்து சேமித்துள்ளோம். மேலும் அனைத்து அரச நிறுவனங்களையும் இயன்றவரை சேமிக்குமாறு கேட்டுக் கொண்டோம்.

கடந்த ஆறு மாதங்களில் இராஜாங்க அமைச்சுக்கள் சுமார் 53 பில்லியன் ரூபாவை சேமித்து எமது செலவினங்களை மீதப்படுத்தியுள்ளன.

அதேபோன்று, இம்முறையும் செலவீனங்களை குறைத்துக்கொண்டு விரயத்தை குறைத்து, உற்பத்திகளை அதிகரித்து எமது பொருளாதாரத்தை பலப்படுத்துவார்கள் என எதிர்ப்பார்க்கிறேன்” எனவும் தெரிவித்தார்.

மேலும் நேற்று நிதி அமைச்சரினால் அறிவிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொதி 229 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கான சகல வரியும் நீக்கப்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், பெருந்தோட்ட துறைசார் குடும்பங்களுக்கு மாதாந்தம் ஒரு கிலோ கிராம் கோதுமை மா 80 ரூபா என்ற அடிப்படையில் 40 ரூபா நிவாரணத்துடன் 15 கிலோகிராம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

அரச சேவையாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் விசேட தேவையுடைய பாதுகாப்புப் படையினர் ஆகியோருக்கு இந்த மாதம் முதல் 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் சமுர்த்தி பயனாளர்களுக்கு இந்த மாதம் முதல் 1000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

மேலும் 20 பேர்ச்சர்ஸ்க்கும் குறைவான விவசாய நிலங்களைக் கொண்டுள்ள விவசாயிகளுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

தற்போதைய நிலையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பவற்றுடன் கலந்துரையாடப்படுவதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: