விடை பெறுகின்றார் நிஷா பிஸ்வால்…!

Monday, January 16th, 2017

 

தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலராகப் பதவி வகித்து வந்த நிஷா பிஸ்வால், இராஜாங்கத் திணைக்களத்தில் இருந்து விடைபெறவுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் திகதி அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், எதிர்வரும் 20 ஆம் திகதி அவர் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றவுள்ள நிலையில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளராக ரெக்ஸ் ரில்லர்சன் பதவியேற்கவுள்ளார்.

அத்துடன், இராஜாங்கத் திணைக்களத்தின் முக்கிய பதவிகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அந்த வகையில், தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளராக பணியாற்றி வந்த நிஷா பிஸ்வாலுக்குப் பதிலாக புதியவர் ஒருவர் நியமிக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படவுள்ளது.

நிஷா பிஸ்வாலுக்கு இராஜாங்கத் திணைக்களத்தில் பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு அண்மையில் வாசிங்டனில் இடம்பெற்றிருந்தது. இதில் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசமும் கலந்துகொண்டிருந்தார்.

நிஷா பிஸ்வாலின் இலங்கை விஜயம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது தரப்புக்கு பெரும் சவாலாக இருந்தமை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. அவரது விஜயத்தின் போது மஹிந்த தரப்பினர் பல்வேறு எதிர்ப்புகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில், நிஷா பிஸ்வால் விடை பெறுகின்றமையால் மஹிந்த தரப்பு ஒரு வகையில் மகிழ்ச்சியில் இருப்பதாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: