மருத்துவ சபைக்கான தேர்தலை குழப்புவதற்கு சூழ்ச்சி!

மருத்துவ சபைக்கான தேர்தலை குழப்புவதற்கான சூழ்ச்சிகள் நடைபெறுவதாக அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தினால் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர்கள்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி செயலகத்தில் மாலபே பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர்கள் சங்கம் மனு ஒன்றை கையளித்துள்ளது.
சைட்டம் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை பெற்றுக்கொடுத்து, மாணவர்களை கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்காவிட்டால் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக சைட்டம் மாணவர்களின்பெற்றோர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Related posts:
|
|