மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!
Wednesday, January 22nd, 2020
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மரக்கறிகளின் விலை 4 மடங்கு அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
நாட்டில் நிலவிய மழையுடனான வானிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கமைய தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட் 380 ரூபாவாக காணப்படுவதுடன், கறிமிளகாய், தக்காளி, போஞ்சி உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளன. இதேவேளை, எதிர்வரும் இரண்டு, மூன்று மாதங்களில் மரக்கறிகளின் விலை மீண்டும் வீழ்ச்சியடையும் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்குழு உறுப்பினர் I.J. விஜேநந்த சுட்டிக்காட்டியுள்ளார்
Related posts:
'சிறுவனுக்கு பாடசாலை கல்வி மறுக்கப்பட்டது ஏன்?'
இந்திய உதவியுடன் மலையத்தில் 15 பாடசாலைகள் அபிவிருத்தி !
பனையின் மூலம் கிடைக்கும் உச்சப் பயனை பெறுவதற்காக ஆய்வுகள்!
|
|
|


