பனையின் மூலம் கிடைக்கும் உச்சப் பயனை பெறுவதற்காக ஆய்வுகள்!

Friday, February 15th, 2019

வட மாகாணத்தில் பனையின் மூலம் கிடைக்கும் உச்ச பயனை பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் முழுமையாக ஆராயப்படவுள்ளது.

வடக்கு மாகாணத்தில் பனைசார் உற்பத்திச் சங்கங்கள், நிலையங்களுக்கு என்ன தேவைகள் உள்ளன? செயற்படுத்த வேண்டிய திட்டங்கள் போன்ற விடயங்களை சபைக்கு முன்மொழிவுகள் மூலம் தாருங்கள் அதற்கான நிதி மூலங்களை இனங்கண்டு அதற்கான வழிவகைகள் செய்து தரப்படும் என்று சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

செயற்கைக் கள்ளை தடை செய்ய வேண்டும். வடக்கில் குறிப்பாக மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தென்னிலங்கையில் இருந்து செயற்கைக் கள் கொண்டு வரப்படுகிறது. ஆனால் அதன் தரம் பற்றி எந்த பரிசோதனையும் மேற்கொள்ளப்படுவதில்லை. வடக்கில் போதுமான கள் உற்பத்தி  செய்யப்படுகின்றது. அதை உரிய வரிகளுடன் போத்தலில் அடைத்தால் அல்லது வடிசாலைகளுக்கு வழங்கினால் அந்த வளம் எமது மாகாணத்துக்கு உள்ளே இருக்கும். இவ்வாறு செயற்கை கள் குடிப்பதால் நோய் நிலைமைக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

செயற்கை கள் எவ்வாறு இங்கு வருகிறது என்பது பற்றியும் அதன் தரம் தொடர்பில் ஆய்வு நடத்த மேலதிக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பனை சார் உற்பத்தியை மேற்கொள்ளுவதற்கு ஒருவர் மரத்தில் ஏறியே ஆக வேண்டும். ஆனால் சமூகம் சார்ந்த தொழிலாக இது தற்போது பார்க்கப்படுவதால் பனை மரம் ஏறுபவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. எந்த உற்பத்திக்கும் பனையில் ஏற வேண்டிய தேவை இருப்பதால் தற்போது பனை ஏறுபவர்களுக்கு இயந்திரம் மூலம் ஏறும் வசதிகளையும் வேறு நாடுகளில் பனை மரத்தில் இலகுவாக ஏறுவதற்கு எந்த வகையான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்று தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Related posts: