சீரற்றகால நிலையால் தேசியவருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாகபொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Thursday, June 8th, 2017

நாட்டின் சீரற்றகாலநிலைகாரணமாகதேசியவருமானத்தின் பெரும் பங்களிப்பைவழங்கிவரும் தேயிலைஉற்பத்திவருமானம் எதிர்காலத்தில் பெரும் பாதிப்புகளைஏற்படுத்தும் என்றுபொருளாதாரநிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனடிப்படையில் சப்ரகமுவ,தென் மாகாணங்கள் சீரற்றகாலநிலையால் மண்சரிவுமற்றும் வெள்ளப் பெருக்குபோன்றஅனர்த்தங்களில் தேயிலைத் தோட்டங்கள் பலஅழிந்தும்,சேதமடைந்தும் காணப்படுகின்றன.

இதன் தாக்கத்தினால் தேசியவருமானத்தில்; பெரும் பாதிப்புகளைஏற்படுத்தும் சாத்தியங்கள் இருப்பதாகவும்பொருளாதாரநிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது இலங்கை தேயிலையைஇறக்குமதிசெய்யும் பட்டியலில் பிரதானபங்கினை, பொதுநலவாய நாடுகள், சவூதிஅரேபியா, துருக்கி, டுபாய்,ஈராக்,குவைத் ஆகியநாடுகள் வகித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையேவெள்ளம் மற்றும் மண்சரிவுகாரணமாகதேயிலைத்துறைக்கு 600 மில்லியன் ரூபாநட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts: