மன்னாரில் மீன்பிடி தொழில் வளர்ச்சி: கடற்றொழில் திணைக்ளத்தின் பிரதிப் பணிப்பாளர்!
Wednesday, January 4th, 2017
மன்னார் மாவட்டத்தில் 2015இல் வீழ்ச்சி கண்ட மீன்பிடி 2016இல் சற்று வளர்ச்சிப் படியை நோக்கிச் சென்றது என மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தின் கடற்றொழிலானது 2015இல் பெரும் வீழ்ச்சி கண்டிருந்தது. இவ்வாறு வீழ்ச்சிகண்ட மீன்பிடியானது 2016இல் சற்று வளர்ச்சிப் படியை நோக்கிச் சென்றுள்ளது. இதன் பிரகாரம் மன்னார் மாவட்டத்தபை பெறுத்த வரையில் இங்கு வாழும் 11ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதரத்திற்காக 4ஆயிரம் கடற்கலங்கள் உள்ளன.
இவ்வாறான கடற்கலங்களின் மூலம் போர் அழிவுகளின் பின்பும் 2014ஆம் ஆண்டில் 25,938 மெற்றிக்தொன் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் 2015இல் இந்த அளவில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டு இதன் அரைவாசியையே ஈட்ட முடிந்தது. 2015இல் பெறப்பட்ட மீன்பிடியானது 13,509 மெற்றிக் தொன்னாகும். இருப்பினும் தற்போது 2014ஆம் ஆண்டின் மீன்பிடியை எட்டமுடியாவிட்டாலும் சற்று அதிகரிப்பு ஏற்ப்டுள்ளது. அதன் பிரகாரம் 2016ஆம் ஆண்டில் மன்னார் மாவட்டத்தின் மொத்த கடல் உற்பத்தியானது 16,308 மெற்றிக்தொன் எனக் கண்டிறியப்பட்டுள்ளது.

Related posts:
|
|
|


