மதுபோதையில் கடற்றொழிலில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான சட்டங்கள் அறிமுகம் – இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராச்சி!

Tuesday, December 6th, 2016

மீனவர்கள் மதுபோதையில் கடற்றொழிலில் ஈடுபடுவதை தடுப்பதற்கான சட்டங்கள் அறிமுகப்படுத்தவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளங்கல் இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராச்சி தெரிவித்துள்ளார்.

கடலில் மீனவர்களின் உயிரைப் பாதுகாப்பதே இந்த முயற்சியின் நோக்கம் என்று அண்மையில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அமைச்சர் குறிப்பிட்டார்.

குடி போதையில் கடலுக்குச் செல்லும் மீனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இத்தகைய மீனவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

f7ab32c92d3b7a1b8dfd4c681ea462a5_XL

Related posts: