நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் பிரதமர் விசேட உரை – நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மூன்று நாள் விவாதம் நடத்தப்படும் என்றும் தெரிவிப்பு!
Thursday, June 2nd, 2022
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (02) நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இதனை தெரிவித்தார்.
அடுத்த வாரம் செவ்வாய்முதல் வெள்ளி வரை நாடாளுமன்றம் நடைபெறும் என்றும், நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மூன்று நாள் விவாதம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
எபடீன் நீர்வீழ்ச்சி சுற்றுலா வலயமாகின்றது!
அனைவருக்கும் இலத்திரனியல் சுகாதார அட்டை- அமைச்சர் ராஜித!
பிரதமர் மோடியின் பதவிப்பிரமாண வைபவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு!
|
|
|


