மக்கள் முன்னிலையில் 37 கோடி பெறுமதியான போதைப்பொருள் அழிப்பு!
Saturday, January 6th, 2018
மக்கள் முன்னிலையில் கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப் பொருட்களையும் அழிக்க தேவையான சட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் விசேட அதிரடிப்படையின்போதைப்பொருள் மற்றும் பாரதூரமான குற்றச் செயல்களை அடக்கும் பிரிவினரால் 375,506,864.37 ரூபா பெறுமதியான ஹெரோயின் சட்டவிரோதசிகரட்டுகள் மதுபானங்கள் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றிய ஹெரோயினின் பெறுமதி 136,119,250.00 ரூபாவும் சட்டவிரோத சிகரட்டுகளின் பெறுமதி 35,330,800.00 ரூபாவும் மதுபானங்களின் பெறுமதி 90,199,732.65 ரூபாவும் கஞ்சாவின் பெறுமதி 113,857,081.72 ரூபாவும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு கட்டணம்?
செய்தி ஊடக தர நிர்ணயங்களுக்கான சுயாதீனப் பேரவைச் சட்டம்!
2021 ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிக்கப்படும் - நாடாளுமன...
|
|
|


