மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் யோசனைகளை சட்டமாக்க முயற்சி – மின்சக்தி அமைச்சு!
Friday, July 15th, 2016
மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள சில யோசனைகளை சட்டமாக்குவதற்கு மின்சக்தி மற்றும் புதுப்பித்தல் சக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி மின்சக்தி தொடர்பான பொறுப்பு மற்றும் செயற்திறனை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு யோசனைகளை சட்டமாக மாற்றுவதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
மின்சாரத்தை பிறப்பித்தல் மற்றும் விநியோகித்தல் செயற்பாடுகளை செயற்திறனுடன் முன்னெடுத்தல், பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பிலான பல்வேறு யோசனைகள் மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுளார்
பாவனையாளர்களுக்கு தடையின்றி தொடர்ச்சியாக மின்சாரம் விநியோகிக்கப்படாமை மற்றும் சேவையில் காணப்படுகின்ற குறைப்பாடுகள் தொடர்பில் சட்டங்களுக்கு அமைவாக எதிர்காலத்தில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறினார்.
Related posts:
நீக்கப்பட்ட பெயர்களைக் கொண்ட "A" பட்டியலும் 2024 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் பெயர் ப...
பல்கலை அனுமதி வெட்டுப்புள்ளி - இம்மாதம் இறுதிக்குள் வெளியாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு...
அங்கீகரிக்கப்படும் முறைப்படி மாகாணசபைத் தேர்தல்களை நடத்தத் தயார் - தேர்தல் ஆணைக்குழு!
|
|
|


