மக்களே கெட்டுப்போயுள்ளனர் – மகிந்த தேசப்பிரிய!

அரசியல்வாதிகள் என்பது பிசாசுக்களோ தூரத்தில் இருக்கும் பூதங்களோ அல்ல. தற்போது மக்களே கெட்டுப் போயுள்ளனர் அன்றி அரசியல்வாதிகள் கெட்டுப் போகவில்லை. இதனால், புதிய மக்களை தெரிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இளம் தலைவர்களை கொண்ட குழு ஒன்று முன்வைத்த பரிந்துரைக்கு அமைய தேர்தல் ஆணைக்குழு, மற்றும் தேர்தல் கட்டமைப்புக்கான சர்வதேச நிதியம் இணைந்து நடந்தும் யுத் வோட் எஸ்.எல் 2016 என்ற தலைப்பில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நடத்தும் தேசிய சமூக வலையமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பில் தெளிவுப்படுத்துவதற்காக இந்த ஊடக சந்திப்பு நடத்தப்பட்டது.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் – இளம் தலைமுறையினர்க்கு கைகொடுத்து, அவர்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் பெற்றுக்கொள்வதன் மூலம் மக்களை புதியவர்களாக மாற்றலாம் என நம்புகிறேன் என கூறியுள்ளார். மேலும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ள நிலையில், அந்த தேர்தல் தொகுதிவாரியாக நடத்தப்பட வேண்டும் என்று சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், தேர்தலை நடத்துவதில் தடையேற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|