இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடமாடும் சேவை!

Thursday, October 27th, 2022

இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.

நடமாடும் சேவை தொடர்பாக தேவையான விடயங்களை தங்கள் பிரதேச செயலகங்களின் ஊடாக பெற்றுக் கொள்ளலாமென மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

குறித்த நடமாடும் சேவையில் பின்வரும் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் பங்குபற்ற உள்ளன.

குறித்த நடமாடும் சேவையில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம், இழப்பீட்டுக்கான அலுவலகம், காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், மாகாண காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் என்பன பங்கேற்கவுள்ளன.

மேலும் குறித்த நடமாடும் சேவையில் பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ் பெற்றுக் கொள்ளல், பிரஜாவுரிமை சான்றிதழ் பெற்றுக் கொள்ளல், இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களுக்கான காணித்தேவை மற்றும் காணி உரிமை பிரச்சினைகள், வன்முறையால் பாதிக்கப்பட்ட சொத்து மற்றும் உயிரிழப்பு, காயத்திற்கான நட்டஈடு பெற்றுக் கொள்ளல், தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளல். இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினூடாக ஏற்கனவே அனுப்பப்பட்ட கோவைகளை பூரணப்படுத்தல் தொடர்பான சேவைகளும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும் இது தொடர்பான தேவையான மேலதிக விடயங்களை தங்கள் பிரதேச செயலகங்களின் ஊடாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: