மக்களுடைய பணத்தைப்பெற்றுக்கொண்டு அவர்களை ஏமாற்றினார் என்ற குற்றச்சாட்டு  – வவு. நிதி நிறுவனத்தின் முகாமையாளர் கைது!

Thursday, December 21st, 2017

நிதி நிறுவனம் என்ற பெயரில் மக்களுடைய பணத்தைப்பெற்று அவர்களை ஏமாற்றிய குற்றச்சாட்டில் குறித்த நிதி நிறுவனத்தின் முகாமையாளர் வவுனியாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் செயற்ப்பட்டு வரும் நிதி நிறுவனம் ஒன்று பணத்தைப்பெற்று ஏமாற்றியது எனத்தெரிவித்து பாதிக்கப்பட்ட மக்களால் நேற்று முன்தினம் காலை அந்த நிறுவனக்கட்டடம் முற்றுகையிடப்பட்டது.

நிறுவனத்தக்குச் சென்ற சுமார் 350 பேருக்கும் அதிகமானவர்கள் 8 மணித்தியாலங்கள் வரை குறித்த நிறுவனத்தின் செயற்ப்பாடுகளை முடக்கி அங்கிருந்த ஊழியர்களைத் தடுத்து வைத்திருந்தனர். தமக்கு நீதி கிடைக்காது அங்கிருந்து நகரப்போவதில்லை எனவும் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மகிந்த வில்வ ஆராட்சி நிலமைகள் தொடர்பாக ஆராய்ந்தார். மக்களுடன் பேசினார். நிதி நிறுவனத்தின் முகாமையாளருடன் தொலைபேசி மூலம் தொடர்பை ஏற்ப்படுத்தி உடனடியாகப் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்தார். மக்கள் தொடர்ச்சியாக கோசங்களை எழுப்பி தமக்கான நீதியைப்பெற்றுத்தருமாறு கோரினர்.

அதற்குப் பாதிக்கப்பட்ட மக்களை வவுனியாப் பொலிஸ் நிலையத்துக்கு வந்து முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கோரினார். மக்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஊழியர்களை விடுவித்து  அனைவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றார். பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தக்கச்சென்று அங்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு 8 மணி வரையும் மக்கள் பொலிஸ் நிலையத்தில் இருந்து அகலவில்லை.

பணத்தைக்கொடுத்து ஏமாந்தவர்கள் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்த முறைப்பாட்டை அடுத்து குறித்த நிறுவனத்தின் முகாமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிமன்றில் முற்ப்படுத்தப்படுவார் என வவுனியாப்பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts: