யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்து!

Tuesday, June 25th, 2019

இந்த வருடத்தில் இதுவரை 22 ஆயிரத்து 283 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள் என்று சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.

கூடுதலான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இனம் காணப்பட்டுள்ளனர். இதன் எண்ணிக்கை நான்காயிரத்து 800 ஆகும். இரண்டாவது கூடுதலான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளார்கள்.

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது. 1928ஆம் ஆண்டின் பின்னர் யாழ்ப்பாண மாவட்டதில் மிகக் கூடுதலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.

நாடாளவிய ரீதியில் கூடுதலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட மூன்றாவது மாவட்டமாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts: