பௌதீக அபிவிருத்திகள் போன்று ஆன்மீக அபிவிருத்தியும் முக்கியம் – ஜனாதிபதி !

Monday, July 9th, 2018

நாட்டில் பௌதீக ரீதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளைப் போன்றே ஆன்மீக நற்பண்புகளை வளர்க்கக்கூடிய விரிவான செயற்றிட்டங்களும் நாட்டுக்கு அவசியம். இவ்வாறு மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சமய சூழலிலிருந்து விலகியுள்ள மக்களை மீண்டும் சமய வாழ்வியலை நோக்கி வரச்செய்து அன்பு கருணை மற்றும் மனிதாபிமானத்துடன் விழுமியப் பண்புகளை பாதுகாக்கும் சமூகத்தை நாட்டில் கட்டியெழுப்ப சகல தரப்பினரும் தமது பொறுப்பினை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பொலன்னறுவை, புலஸ்திகம சிறி சாந்தி நிக்கேத்தனாராம விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட தாதுகோபுரத்தை திறக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. அதில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு முதலில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். பின்னர் புதிய தாதுகோபுரத்தைத் திறந்து வைத்தார். நிகழ்வில் மகாசங்கத்தினரும் பெரும்பாலான பக்தர்களும் கலந்துகொண்டனர்.

Related posts: