யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்: கணவன், மனைவியை கட்டிவைத்துவிட்டு 16 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளை – அச்சத்தில் மக்கள்!

Tuesday, October 13th, 2020

யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் வீதியால் சென்ற வயோதிப பெண்ணிடமிருந்து 4 பவுன் தங்கச்சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் நேற்றுமாலை வீதியால் சென்ற பெண்ணை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பின் தொடர்ந்துள்ளனர்.ஆட்கள் நடமாற்றம் அற்ற பகுதியில் வைத்து குறித்த வயோதிபர் பெண்ணை தாக்கி அவரிடமிருந்து 4 பவுன் தங்கச்சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வயோதிப பெண் சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை யாழ்.தென்மராட்சி – கச்சாய் பகுதியில் நேற்றிரவு சடுதியாக வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த கணவன், மனைவியை கட்டிவைத்துவிட்டு 16 இலட்சம் பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளது.

முகத்தை மறைத்துக் கொண்டு கம்பிகள், கத்திகளுடன் நுழைந்த 3 பேர் கொண்ட குறித்த கும்பல் வீட்டில் இருந்த தம்பதி இருவரையும் கட்டிவைத்துவிட்டு வீட்டிலிருந்த தாலிக்கொடி உட்பட பல நகைகளை கொளளையிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.

இதன்போது கொள்ளையர்கள் 10 பவுண் தாலிக்கொடியும், 4 பவுண் சங்கிலியும், 1 பவுண் மோதிரமும், 3/4 பவுண் தோடும் மற்றும் 25000 ரூபா பணமும் கொள்ளையிட்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதுது.

Related posts: