போர்க்குற்ற நீதிமன்றம் ஸ்தாபிக்கப்படமாட்டாது – நீதி அமைச்சர் !
Thursday, July 14th, 2016
நாட்டில் போர்க் குற்ற நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பமாட்டாது என நீதி அமைச்சர் விஜயதாசராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுயாதீனத்தன்மை பௌதீக ஒருமைப்பாடு இறைமைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் அரசாங்கம் எந்தவிதமான தீர்மானத்தையும் எடுக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துருகிரிய – பனாகொட பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் போர்க் குற்ற நீதிமன்றம் உருவாக்கப்பட உள்ளதாக செய்யப்படும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். குற்றம் சுமத்தும் தரப்பினர்களே இந்த நீதிமன்றம் எப்போது எவரால் எவ்வாறு அமைக்கப்படும் என்பதனை விளக்க வேண்டும் அரசாங்கம் அதுபற்றி விளக்க வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஜெய்ப்பூர் புனர்வாழ்வு நிறுவனம் 26-30வரை மூடப்பட்டிருக்கும்!
தேசிய முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியானது மற்றுமொரு விசேட வர்த்தமானி...
50 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு சிவப்பு கட்டணப் பட்டியலை - ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பி...
|
|
|


