போக்குவரத்து விதிமுறை: தண்டப்பணத்தை 30 ஆயிரம் ரூபாவாக உயர்த்த பரிந்துரை!

Thursday, February 23rd, 2017

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு விதிக்கப்படும் தண்டப்பணம் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட குழு தமது அறிக்கையில் தண்டப்பணம் 30 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சம்மேளன தலைவர் சரத் விஜிதகுமார இந்த தகவலைகொழும்பில் செய்தியாளர்களிடம் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே 25ஆயிரம் ரூபா தண்டப்பணத்தை ஆட்சேபித்தமை காரணமாகவே ஜனாதிபதியினால்அதனை ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டது.

எனினும் அந்தக்குழு குறித்த தண்டப்பணம் 30 ஆயிரம் ரூபாவாக அமையவேண்டும் என்றும்150ஆயிரம் ரூபா வரை சிறைத்தண்டனையும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைசெய்துள்ளது.

இது அரசாங்கம் பொதுமக்களின் நிலைமையை கவனிக்காது வருமானம் ஈட்டும் நடவடிக்கையில்மாத்திரமே கவனம் செலுத்துவதை காட்டுகிறது என்று சரத் விஜிதகுமார குற்றம்சுமத்தியுள்ளார்.

625.500.560.350.160.300.053.800.900.160.90

Related posts: