பொலிஸ் காவல் சித்திரவதை தொடர்பாக ஆராய விசேட பிரிவு – பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை!

Tuesday, December 27th, 2016

பொலிஸ்காவலில் இருக்கும் நபர்கள் மரணமடைவது, சித்திரவதைகளுக்கு உள்ளாகுவது தொடர்பில் விசேட விசாரணைப் பிரிவொன்றை அமைக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபருக்கு பரிந்துரை செய்துள்ளது..

கடந்த வருடங்களில் பொலிஸ் காவலில் இருந்த நபர்கள் மரணமடைந்த சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். அவ்வாறான சம்பவங்கள் பலவற்றை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார் காவலில் இருக்கும் நபர்கள் மரணமடைவது தொடர்பான விசாரணையின் போது பொலிஸார் நடுநிலையாக கடமையாற்றுவதில்லை என்பது தெளிவாகியுள்ளது.

எனவே குறிப்பிட்ட நபர்களுக்கு நியாயம் கிடைக்கவும் சரியாக செயற்படாத பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விசேட விசாரணைப்பிரிவு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

HRC in SL

Related posts: