ஆசிரியர் உயிரிழப்பு:  விபத்தை ஏற்படுத்திய சாரதிக்கு மறியல்!

Wednesday, October 19th, 2016

விபத்தில் கால் ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆசிரியரொருவர் உயிரிழந்ததை அடுத்து விபத்துடன் தொடர்புபட்ட சாரதியை 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ரீ.கருணாகரன் உத்தரவிட்டார்.

கடந்த 05ஆம் திகதி பருத்தித்துறை – யாழ்ப்பாணம் பிரதான வீதியின் அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இடம்பெற்ற ஹன்ரர் மோட்டார் – சைக்கிள் விபத்தில் பனடிக் பசில் ஜெனதாஸ் (வயது-50) என்ற கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் மற்றும் அவரது மனைவி காயங்களுக்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் ஆசிரியர் பசில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்திருந்தார். விபத்தினை ஏற்படுத்திய சாரதி, ஏற்கனவே அச்சுவேலி பொலிஸாரால் கைதாகி மல்லாகம் நீதிமன்ற நீதிவானின் உத்தரவிற்கு அமைய பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். சம்பவத்தில் காயமடைந்த ஆசிரியர் உயிரிழந்ததை அடுத்து, மீண்டும் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவரை திங்கட்கிழமை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தியபோது விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Judicial decisions

Related posts: