பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி கவனம் செலுத்தவுள்ளார்!
Friday, September 2nd, 2016
பொலிஸ் அதிகாரிகள் முகங்கொடுத்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார்.
அந்தவகையில் பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு தொடர்பாக ஒரு முறையான முறைமையைப் பின்பற்றவும் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரையிலான சகல மட்டங்களிலும் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடி நிகழ்ச்சித் திட்டமொன்றை ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி பொலிஸ் ஆணைக்குழுவுக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் அவ்வப்போது ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, மக்களுக்கு மிகவும் வினைத்திறன்மிக்க ஒரு சேவையை பெற்றுக்கொடுப்பதற்காக அப்பிரச்சினைகளை உடனடியாகத் தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts:
வயாவிளான் ஆலய புனரமைப்புக்கு இராணுவத்தினர் அனுமதி!
இலங்கையின் தேயிலை சந்தை சீனாவில்!
வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய புனித்தன்மை அழிக்கப்படுகின்றது - பூசகர...
|
|
|
எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் எந்த உண்மையும் இல்லை - யாழ்ப்பாணத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பி...
வாக்காளரின் உள்ளத்தில் உள்ள வெறுப்பை நீக்கி வாக்களிப்பு நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் - வஜிர அபேவர்த...
நாட்டிற்கு பொருத்தமான சிறந்த பிரஜைகள் ஆரம்ப பாடசாலைகளில் உருவாக்கப்பட வேண்டும் - அமைச்சர் மனுஷ நாணயக...


