பொலிஸாரை மோதிவிட்டு கள்ள மணல் ஏற்றி வந்ததோர் தப்பி ஓட்டம்!
Sunday, February 4th, 2018
மணற்காடு – வரணிப் பகுதியில் மணல் ஏற்றி வந்த கன்ரர் வாகனம் பொலிஸாரின் மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு சாரதி வாகனத்தைக் கைவிட்டுத்தப்பியோடியுள்ளார்.
சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த வாகனத்தை காங்கேசன்துறை சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸார் வழிமறித்தனர். இதன்போது வாகனத்தை வேகமாகசெலுத்த முற்பட்ட சாரதி நிறுத்தப்பட்டிருந்த பொலிஸாரின் மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளினார்.
குறித்த வாகனம் அருகேயுள்ள பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
சாரதியும் ஏனைய இருவரும் தப்பியோடி விட்டதாகவும் மீட்கப்பட்ட வாகனம் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது எனவும்பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
இலங்கையில் கடந்த வருடம் 51 பேருக்கு மரண தண்டனை!
நாட்டிலும் நிலவிய எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு நேற்றுமுதல் முற்றுப்புள்ளி - வலு சக்தி அமைச்சு அறிவிப்...
பதவியைத் துறந்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச !
|
|
|


