பொலிஸாரை அச்சுறுத்தியவர் கைது!

அலைபேசி மூலம் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்த ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த இளைஞனை, நேற்று (18) இரவு கைதுசெய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
ஆவரங்கால் பகுதியிலுள்ள கள்ளுத்தவறணை ஒன்றிற்கு தீ வைத்து 50 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை அண்மையில் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரின் சகோதரன், அலைபேசி மூலம் பொலிஸாரை தொடர்புகொண்டு சகோதரனை கைது செய்தமை தொடர்பில் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இதனையடுத்தே, அச்சுறுத்தல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Related posts:
பொலிஸாரை வெட்டிய குற்றச்சாட்டு: பிடிபட்ட ஒருவரின் விளக்கமறியல் நீடிப்பு!
வெளிநாடு செல்ல காத்திருப்பவர்கள் தாம் செல்ல வேண்டிய நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தடுப்பூசியை பெற்று...
அனைத்து நிறுவனங்களிலும் COVID அதிகாரி ஒருவரை நியமியுங்கள் - பிரதானிகளுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத...
|
|