பொலிசார் துப்பாக்கிச் சூடு – பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய நபர் பருத்தித்துறை பொலிசாரால் கைது!
Monday, October 9th, 2023
பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்துள்ளனர்.
அத்துடன் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அல்வாய் பகுதியில் இன்றையதினம் திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் , அருமைராசா சிந்துஜன் வயது 27 எனும் நபரே காயமடைந்துள்ளார்.
பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள், திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குறித்த நபரை பொலிசார் கைது செய்ய முற்பட்ட போது, பொலிசார் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் செல்ல முற்பட்டார். அதன் போது, பொலிசார் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
அதில் சந்தேகநபர் காலில் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


