பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்வோருக்கு நிவாரணம் வழங்கும் திட்டம்!
Friday, December 30th, 2016
பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளுவோருக்கு நிவாரணம் அளிக்கும் திட்டமொன்று அமுல் நடத்தப்படவுள்ளது. இதற்காக நுண்கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகர் ஷரித்த ரத்வத்தே தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நுண்கடன் சட்டம் பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னைய அரசாங்கம் பெருமளவு வெளிநாட்டுக் கடன்களைப் பெற்று பாரிய அளவிலான அபிவிருத்தித் திட்டங்களை தொடங்கியதாக திரு.ரத்வத்தே மேலும் குறிப்பிட்டார்.

Related posts:
மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும்!
சமையல் எரிவாயுவின் புதிய விலை அமுலுக்கு வந்தது!
நீரில் மூழ்கி ஒவ்வொரு வருடமும் 800 மரணங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்!
|
|
|


