பொன்சேகாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

Tuesday, September 5th, 2017

அமைச்சர், ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவர மகிந்த அணி முயற்சிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த தினங்களில் இராணுவத்துக்கு எதிராக அவர் வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. இது தொடர்பில் இன்றைய தினம் கூடவுள்ள மகிந்த அணியின் கட்சித் தலைவர்களது கூட்டத்தின் போது தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

மகிந்த அணியின் பிரதி இணைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஸா இதனைத் தெரிவித்துள்ளார்.இதேவேளை, யுத்த வீரர்கள் என்ற போர்வையில், பிழை செய்தவர்களை பாதுகாப்பது மக்களுக்கு செய்யும் அநீதி என்று மாகாண அபிவிருத்தி அமைச்சர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கிரிபத்கொடவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்யுத்தக் காலத்தில் குற்றம் புரிந்தவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்

சிலர் தாம் இராணுவத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டதாக கூறுகின்றனர்ஆனால் தாம் காட்டிக் கொடுத்திருந்தால், யுத்தத்தை எவ்வாறு நிறைவு செய்திருக்க முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் நாட்டின் தலைவர்கள் எப்போதும் மக்களின் பக்கமே இருக்க வேண்டும் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

Related posts: