தூங்கும் பொலிஸார் மீது விரைந்து நடவடிக்கை – ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி!

Monday, March 13th, 2017

கடமையின்போது தூங்­கும் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்கப்படும் என  ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி சிரேஸ்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஓமந்தை அரச ஊழி­யர் வீட்­டுத் திட்­ட­ப­கு­தி­யில் உள்ள சிறிநா­க­பூ­சணி அம்­மன் ஆல­யத்­தில் கிராம அபி­வி­ருத்­திச்­சங்­கத்­த­லை­வர் கு.சண்­மு­க­லிங்­கம் தலை­மை­யில் நேற்று  ஓமந்தை பொலிஸாருக்கும் அரச ஊழி­யர் வீட்­டுத்­திட்ட பகு­தி­யில் வசிக்­கும் அரச ஊ­ழி­யர்­க­ளுக்­கு­மி­டையே கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றது. அதில் ஓமந்தை அரச ஊழி­யர் வீட்­டுத்­திட்டத்­தில் நடை­பெற்ற களவு தொடர்­பா­கக் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தொடர்ந்து  தெரி­வித்­த­தா­வது-,

இங்கு ஒரு பிர­தேச செய­லா­ளர் இருக்­கி­றார். இங்­குள்­ள­வர்­கள் மற்­றும் இப்­ப­கு­தி­யில் வேலை செய்ய­வ­ரு­ப­வர்­கள் தொடர்­பாக நாங்­கள் விவரங்­களை திரட்ட உள்­ளோம் . பற்­றைக்­கா­டா­க­வுள்ள காணி­க­ளின் உரி­மை­யா­ளர் விவ­ரங்­களை கிராம அபி­வி­ருத்­திச் சங்­கத்­தி­னர் கடந்த சில­நாள்­க­ளுக்கு முன்­னர் தந்­த­னர்.  அவர்­க­ளுக்­கு­ரிய சட்ட நட­வ­டிக்­கையை சம்­பந்­தப்­பட்ட அரச அதி­கா­ரி­க­ளு­டன் இணைந்து எடுக்­க­வுள்­ளோம்.

திருட்டை பிடிப்­ப­தற்கு உத­வி­யாக  வவு­னியா மாவட்ட பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கு ஒரு மோப்ப நாயே உள்­ளது. எமக்­கும் வளப்­பற்­றாக்­குறை உள்­ளது. இரவு 10 மணி­யி­லி­ருந்து விடி­யும் வரை ரோந்து நட­வ­டிக்­கையை இந்த வீட்­டுத்­திட்­டப் பகு­தி­யில் முன்­னெ­டுக்­க­வுள்­ளோம். எனது தொலைபேசி இலக்­கம் இங்­குள்ள அரச உத்­தி­யோ­க­த்தர்­க­ளுக்கு வழங்­கி­யுள்­ளேன். எந்த நேர­மும்  குற்­றச்­செ­யல்­கள் தொடர்­பாக தொடர்­பு­கொள்­ள­லாம்.

சந்­தே­கத்­துக்­கி­ட­மாக இந்தப் பகு­தி­யில் நட­மா­டு­வோரை உட­ன­டி­யாக கைது­செய்து பொலிஸ் நிலையத்­துக்கு கொண்டு செல்ல எமது பொலிஸ் குழு நட­வ­டிக்­கை­யெ­டுக்­கும். எமது பொலிஸ் குழு விழிப்­பு­டன் செயற்­ப­டும்.

அர­ச­ஊ­ழி­யர்­கள் காணி­க­ளில் பற்­றை­கள் இருப்­பது அசௌ­க­ரி­ய­மான விட­யம்.  இத­னை­த­டுக்க பிரதே­ச­செ­ய­லர், சுகா­தா­ர­ப் ப­ரி­ சோ­த­கர், வீட­மைப்பு அதி­கா­ர­ச­பை­யி­னர் உட்­பட சம்­பந்­தப்­பட்ட அதிகா­ரி­கள் பொறுப்­பு­டன் செயற்­ப­ட­வேண்­டும்.

எமது பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­கள் கடமை நேரத்­தில் நித்­திரை கொள்­கி­றார்­கள் எனச் சிலர் குற்­றம் சாட்­டி­னர்.  அவ்­வாறு உறங்­கி­னால் அவர் யார் என்று சொல்­லுங்­கள் நட­வ­டிக்கை எடுக்­கி­றேன்.  எமது பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­கள் இரவு பாது­காப்பு நட­வ­டிக்­கை­யாக சென்று திரும்­பிய பின்­னர் களைப்­பில் நித்­திரை கொள்ளலாம். அதற்கு நான் இட­ம­ளிக்­க­மாட்­டேன். அரச ஊழி­யர்­கள் வீடு­க­ளில் பொருத்­த­மான இடத்­தி­லும் வீதி­களை கம­ரா­வின் பார்­வைக்கு விட­வேண்­டும்.அண்­மை­யில் நடைபெற்ற கள­வு­டன் தொடர்­பு­டை­ய­வர்­களை கைது­செய்­வோம் என்­றார்.

Related posts:

தேசிய கலவியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பம் - கல்வி அமைச...
இலங்கையின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல இந்தியா ஒத்துழைக்கும் - இந்திய நிதியமைச்சர் அறிவிப்...
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துங்கள் - துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில்...