அதிகாரப் பகிர்வு என்ற இலக்கினை நோக்கிப்பயணித்துக் கொண்டிருக்கின்றோம் : அமைச்சர் மனோகணேசன்!

Tuesday, September 20th, 2016

அதிகாரப்  பகிர்வு என்ற இலக்கினை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். முழுமையாகத் தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றமுடியவில்லை. ஆனால், படிப்படியாக நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றோம். எதிர்காலத்தில் முழுமையாக நிறைவேற்றக் கூடிய சூழ்நிலை ஏற்படுமென எதிர்பார்க்கின்றோம்  எனத் தெரிவித்தார் தேசிய மொழிகள், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன்.

தேசிய மொழிகள் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் நாட்டின் அபிவிருத்திக்கு சகவாழ்வு மேம்பாட்டுக்கான  ஊடகவியாளர்களின்   செயலமர்வு நேற்று (19) யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் தேசிய மொழிகள் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் செயலாளர் பரணவிதான தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில்,

இந்த அரசாங்கத்தில் எல்லாம் நடைபெற்று விட்டன என்று கூற முடியாது. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள். அரசியல் தீர்வு கிடைத்து விட்டது என்று சொல்ல வரவில்லை. அப்படிச் சொல்வதற்கு நான் பொய்யனும் அல்ல. முட்டாளும் அல்ல. அப்படிச்  சொல்ல முடியாது. ஆனால், அரசியல் தீர்வினை நோக்கிய நகர்வு இருக்கின்றது.  மேலும் கர்நாடாகாவில் நடைபெற்ற அசம்பாவிதத்தின் போது, தமிழ் நாட்டு தமிழ் மக்களைக் காப்பாற்ற முடியாத சீமான், பழநெடுமாறன் மற்றும் வைகோ உள்ளிட்டவர்கள் எமது தமிழ்மக்களைக் காப்பாற்ற நினைக்கின்றார்கள் எனவும் சாடினார்.

unnamed

Related posts: