வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கட்டாருக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்!

Saturday, December 9th, 2023

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கட்டாருக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கட்டாரின் தோஹாவில் இடம்பெறும் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு பயணித்துள்ளார்.

உலக நாடுகள் எதிர்நோக்கும் முக்கியமான சவால்கள் குறித்து அங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது கட்டார் வெளியுறவுத்துறை அமைச்சரை அவர் சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இதன்போது கட்டாரில் உள்ள முக்கிய வர்த்தக நிறுவன தலைவர்களையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


புதிய அரசியலமைப்பு சிறந்த ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கின்றேன் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹ...
விவசாயத்துறைக்கான உதவிகளை 18 மாதங்களுக்கு நீடிக்கின்றது உலக வங்கி - விவசாய அமைச்சு தெரிவிப்பு!
ஜனாதிபதியிடம் தேர்தலுக்கு பணம் கோரி ஒரு மாதமாகியும் பதில் கிடைக்கவில்லை - தேர்தல்கள் ஆணைக்குழு கவலை!