பொதுத் தேர்தல் நடத்தப்படுவது குறித்து குறித்து ஆராய்வு!

Monday, May 11th, 2020

பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடத்துவதற்கு போதிய கால அவகாசம் இல்லை எனவும், அதற்கான முன்னாயத்தப் பணிகள் எவையும் பூரணப்படுத்தப்படவில்லை எனவும் இதன் காரணமாகத் தேர்தலைப் பிறிதொரு திகதியில் நடத்துவதே சாத்தியமானது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் ஜூலை மாத இறுதியில் அல்லது ஓகஸ்ட் தொடக்கத்தில் பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராயப்படுவதாகவும் கூறப்பட்டது. இரண்டாவது தடவையாகத் தேர்தல் திகதி குறிப்பிடப்பட்டு விசேட வர்த்தமானி ஊடாக தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், நிலவும் சூழ்நிலை காரணமாக, அன்று தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன்படி, ஜூலை மாத இறுதியில் அல்லது ஓகஸ்ட் தொடக்கத்தில் பொதுத் தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணையம் தனது கவனத்தைச் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜூன் 20 ம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முடிவை இரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ன. இது குறித்தும் கவனம் செலுத்தப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் பொதுத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி திட்டமிடப்பட்டது. இருப்பினும், கொரோனா தொற்றுநோய் காரணமாக தேர்தலை ஜூன் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணைக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: