தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளின் மத்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆசி வேண்டி சிறப்பு பூசை வழிபாடு!

Monday, June 29th, 2020

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச சிறப்பு பூசை வழிபாடுகளையும் மேற்கொண்டு வருகின்றார்.

இதன் ஒரு அங்கமாக கொழும்பு காளி கோயிலுக்கு சென்றிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச  சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.

இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு ஆசிவேண்டி காளிவோயில் நிர்வாகத்தினரால் சிறப்பு பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாக கோட்டபய ராஜபக்ச பதவியேற்றிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசு அமைக்கப்பட்டது.

கடந்த நல்லாட்சி காலத்தில் மக்கள் பொருளாதார மற்றும் வாழ்வாதார ரீதியில் பல வழிகளிலும் அசௌகரியங்களை சந்தித்து வந்த நிலையில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச  மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரது வழிகாட்டலில் புதிய அரசு மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா தொற்றை அடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்ட்டிருந்தது.

இந்நிலையில்  எதிர்வரும் ஓகஸ’ட் 5 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரசரெ நடவடிக்கைகள் வெகமாக மன்னெடக்கப்பட்டவரும் நிழலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆசிவேண்டி சிறப்பு பூசை வழிபாடுகள் மேற்கொண்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

Related posts: