பேருந்து மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி!

Saturday, June 18th, 2016

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு றெட்பானா பகுதியில், பஸ்ஸொன்று மோட்டார் சைக்கிளை பந்தாடியதில் அந்த மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்றவர், ஸ்தலத்திலேயே பலியான சம்பவமொன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

பரந்தனிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த பஸ்ஸே, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளியுள்ளது.

புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

 

Related posts: