பேருந்தில் அத்துமீறி நுழைந்து பணம் பறிப்பு!

Sunday, October 16th, 2016

 

யாழ்ப்பாணம் கச்சேரி ஏ9 பிரதான வீதியில் கச்சேரி மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துக்குள் அத்துமீறி நுழைந்த 10 பேர் பேருந்தினை சேதப்படுத்தியதோடு பேருந்து நடத்துனரிடமிருந்த பேருந்து டிக்கெட் புத்தகத்தையும் பணத்தையும் பறித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்திற்கு சொந்தமான பஸ்ஸினை கச்சேரி மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சிறிய லொறி ஒன்றில் வந்த 10 பேர் வழிமறித்துள்ளனர்.

அதன்பின் பேருந்தினுள் நுழைந்து பேருந்தின் சாரதியினை மிரட்டியதோடு பேருந்தையும் சேதப்படுத்தி நடத்துனரிடமிருந்து பணத்தினையும் டிக்கெட் புத்தகத்தையும் பறித்து தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் பயணிகள் தெரிவிக்கையில் பஸ்ஸிற்குள் நுழைந்த 10 பேரும் அதிக மது போதையில்  இருந்ததாக தெரிவித்தனர்.

201606121452144179_truck-driver-robs-near-athur_SECVPF

Related posts: