பேசுவதற்கு முன்வரும் எவருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!
Friday, May 17th, 2024
பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ள எவருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
நேற்று (16) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் குழுவுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய அரசாங்கம் மூன்று பணிகளை நிறைவேற்றியுள்ளது. நீதியை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக சட்டத்தின் ஆட்சியை நாம் பலப்படுத்தியுள்ளோம்.
ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான சட்டங்களையும் நாங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளோம். ஊழலுக்கு எதிரான சட்டங்களையும் அமுல்படுத்தியுள்ளோம்.
இந்த கடினமான பணிகளை வெற்றிகரமாக செயல்படுத்த அனைவரின் ஆதரவையும் நான் எதிர்பார்க்கிறேன்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவீர்களா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, சமூகத்தில் நிலவும் கேள்வியை அப்படியே இருக்க விடுவதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


