பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு!

Wednesday, October 10th, 2018

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக தம்புள்ளை பிரதேசத்தில் பெரிய வெங்காயச் செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மழையினால் உற்பத்திப் பொருட்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள தம்புள்ளை பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு உடனடியாக நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

உரிய மதிப்பீடுகளை மேற்கொண்டு நட்டஈடுகளை வழங்குமாறும், ஒரு வார காலத்திற்குள் அது தொடர்பான அறிக்கையை தமக்கு வழங்குமாறும் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts: