புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்த மாணவி!

Wednesday, February 1st, 2017

உலகில் முதல் முறையாக ட்ரகன் ருட் பழத்தை பயன்படுத்தி புற்றுநோய் செல்களை அழிக்கும் மருந்தொன்றை கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் 11 தரத்தில் பயிலும் சமாஷி முனவீர என்ற மாணவி கண்டுபிடித்துள்ளார்.

புதிய கண்டுபிடிப்பை உறுதிப்படுத்த தினமும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இறுதி பரிசோதனை எதிர்வரும் 9 ஆம் திகதி நடத்தப்பட உள்ளது.

மாணவியின் பரிசோதனைகள், கொழும்பு பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர்வேதியல் மற்றும் உயிரியல் பரிசோதனை தொழிற்நுட்ப நிறுவனத்தின் கலாநிதி சமீர சமரகோன் முழுமையான வழிக்காட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நெஞ்சில் ஏற்படும் வலி, உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு அமெரிக்காவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருந்தை ட்ரகன் ருட் பழத்தின் தோலுடன் சிறிதளவு கலந்து புற்றுநோய் செல்லுடன் கலந்து இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, மார்பாக புற்றுநோய்க்கு இந்த மருந்தை பயன்படுத்த முடியும் என்பது சிறப்பம்சமாகும்.

cancer-650x488

Related posts: