நுண்கடன் தொல்லை: மேலும் ஒரு தற்கொலை!

Tuesday, June 12th, 2018

நுண்கடன் தொல்லையினால் மட்டக்களப்பு – மாவடிவேம்பு பிரதேசத்தில் மற்றுமொரு இளம் குடும்பஸ்தர் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மாவடிவேம்பு சம்பந்தர் வீதியைச் சேர்ந்த 25 வயதான மேகராசா யோகராசா என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு மரணமடைந்தவரென ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் நான்கு நிறுவனங்களில் ஏக காலத்தில் நுண்கடன்களைப் பெற்று முன்னெடுத்த தொழிலில் நட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் தவணைப் பணத்தைச் செலுத்த முடியாது போனது. இந்நிலையில் மற்றுமொரு நிறுவனத்தில் கடனைப் பெற முயற்சித்த வேளை தனது மனைவியுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Related posts:


கடன் சலுகை பெற்றுக் கொண்டவர்களது தகவல்களை வழங்குமாறு இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் அனைத்து வங்கிகளிட...
‘நீர்ப்பாசன சுபீட்சம்’- குளங்கள் மற்றும் நீர்ப்பாசன நீர் நிலைகளை விரைவாக புனரமைக்க தேசிய திட்டம் ஜன...
அனைத்து மக்களினதும் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வரவு செலவுத்திட்டம் அமையும் - இராஜாங்க அமைச்சர்...