நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – 14 பேர் மரணங்கள்பதிவு – ஒருவரை காணவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிப்பு!

Thursday, November 25th, 2021

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் ஒன்பது மாவட்டங்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒரு இலட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய , 22 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவரை காணவில்லை எனவும் கறிப்பிட்டள்ள கறித்த மத்திய நிலையம் 452 வீடுகள் பகுதியளவிலும் 56 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது

இதேவேளை 30 குடும்பங்களைச் சேர்ந்த 114 பேர் ஆறு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

புத்தளத்தில் 7 பேரும், அம்பாந்தோட்டையில் ஒருவரும் மற்றும் திருகோணமலையில் 6 பேரும் மேற்படி உயிரிழந்துள்ளனர் என்றும் குறித்த நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: