ஒரு வார காலத்திற்கு நாடாளுமன்றின் அமர்வுகள் ஒத்தி வைப்பு!

Saturday, September 10th, 2016

நாடாளுமன்றின் இலத்திரனியல் தொடர்பாடல் கட்டமைப்பை நவீனமயப்படுத்தும் நோக்கில் நாடாளுமன்றத்தின் ஒக்ரோபர் மாத அமர்வுகள் ஒருவார காலம் ஒத்தி வைக்கப்பட உள்ளது.

கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அவையின் ஒலி வாங்கி மற்றும் ஒலி பெருக்கி வசதிகள் இலத்திரனியல் வாக்களிப்பு முறைமை உள்ளிட்ட அதி நவீன கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட உள்ளன.

ஒக்ரோபர் மாதம் முதல் வாரத்தில் வழமை போல் நாடாளுமன்ற கூட்டங்கள் நடைபெறும். பின்னர் ஒக்ரோபர் மாதம் 18ம் திகதி முதல் 21ம் திகதி வரையில் நடத்தப்படவிருந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. அதி நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கி இந்த மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் இதற்காக சுமார் 17 நாட்கள் தேவைப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனால் ஒக்ரோபர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் நடைபெறவிருந்த அமர்வுகள் மூன்றாம் வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

par-party

Related posts: