புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை – கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு!

Monday, May 2nd, 2022

இலங்கையில், புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு நேற்று அறிவித்தது.

புனித சவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பிறை தென்பட்டமைக்கான ஆதாரம் கிடைக்கப்பெறவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு அறிவித்தது.

இதற்கமைய, இஸ்லாமியர்கள் இன்றையதினமும் நோன்பு நோற்பதுடன், நாளையதினம் புனித ரமழான் பண்டிகையை கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: