புதுடில்லியில் உருவாகும் பௌத்த தூபி!

Thursday, June 8th, 2017

இந்தியாவின் புதுடில்லியில் பௌத்த தூபி ஒன்றை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதை தெரிவித்துள்ளார். வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

புதுடில்லியில் இதற்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை மஹாபொதி நிறுவனம் நிர்வகிக்கின்றது. அந்த விகாரையில் குறிப்பிட்டளவு இடவசதியும் காணப்படுகின்றது. வெளிநாடுகளில் இருந்து வருகின்ற பக்தர்கள் தரிசிப்பதற்கு ஓர் தூபி அங்கு இல்லை. மேலும் அவர்களுக்கான முறையான வசதிகளும் அங்கு குறைவாகவே காணப்படுகின்றது.

அதனடிப்படையில் புதுடில்லியில் பௌத்த தூபி ஒன்றை நிர்மாணிப்பதற்கு தேவையான நிலமொன்றை பெற்றுக் கொள்வதற்காக இந்திய அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Related posts:

எரிபொருள் இறக்குமதி மீதான வரிகளை நீக்க கோரி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் எழுத்து மூலம் கோரிக்கை ...
மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களை அழைப்பது தொடர்பான சுற்றுநிருபம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பு -...
யாழ் மாவட்டத்தில் 25 வீதமானவர்களுக்கு நீரிழிவு நோய் - யாழ். நீரிழிவு கழகத்தின் கழகத்தின் தலைவர் அதிர...